ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (14:47 IST)
தனது அரசியல் பிரவேசத்தை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்று ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார். அவரது அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை நடிகர் கமல், ரஜினிகாந்த்திற்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் டிவிட்டரில், என் நெருங்கிய நண்பரும், சக ஊழியருமான மனிதாபிமானம் மிக்க ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவித்துள்ளார். அவர் அரசியலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்