அஜித் மனைவில் ஷாலினி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு – அஜித் மேனேஜர் விளக்கம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (10:31 IST)
அஜித் மனைவி ஷாலினி ட்விட்டரில் கணக்கு தொடங்கியதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என அஜித் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகரான அஜித் நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஷாலினி சமூக வலைதளங்களில் எந்த கணக்கும் இதுவரை வைத்திருக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஷாலினி பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் அஜித், ஷாலினி இருக்கும் படத்தை பகிர்ந்து இது எனது முதல் டிவிட்டர் கணக்கு என பதிவிடப்பட்டுள்ளது. அது ஷாலினியின் கணக்குதான் என நினைத்து பலர் பின்தொடர்ந்த நிலையில், அது போலி ஐடி என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தோ அவரது மனைவி ஷாலினியோ சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக எந்த கணக்கும் வைத்தில்லை எனவும், போலி ஐடிக்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்