ரஜினிக்கு கதை வைத்திருக்கின்றேன்: ‘பிரேமம்’ இயக்குனர் பேட்டி!

Webdunia
திங்கள், 17 மே 2021 (20:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதை வைத்திருப்பதாக பல இயக்குனர்கள் கூறிக் கொண்டு வரும் நிலையில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் அவர்களும் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிக்கு ஒரு கதை வைத்திருப்பதாக கூறியுள்ளார் 
 
தற்போது பகத் பாசில் நயன்தாரா நடிக்கும் பாட்டு என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்ற கதை ஒன்றை நான் ஏற்கனவே வைத்திருப்பதாகவும் ரஜினியை சந்திக்க முயற்சித்து வருவதாகவும் கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார் 
 
ரஜினியை சந்தித்து விட்டால் கண்டிப்பாக அவர் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்