விஜய் சேதுபதியின் பழைய ஃபோட்டோஷூட்… பிரேமம் இயக்குனர் பகிர்ந்த விண்டேஜ் புகைப்படங்கள்

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (12:02 IST)
அல்போன்ஸ் புத்ரன் தற்போது பகிர்ந்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதற்கடுத்து 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது Gold திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் சேதுபதியை அவர் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அல்போன்ஸ் புத்ரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியவர்கள் wind குறும்படத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்