உலகம் முழுவதும் வெளியாகியும் தமிழகத்தில் வெளியாகாத பாகுபலி 2!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (10:21 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் இன்று ரிலீஸாக இருந்தது. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உலகம் முழுதும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் தமிழில் பாகுபலி-2 திரைப்படம் 650 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

 
இந்நிலையில் உலகம் முழுவதும் படம் வெளியாகியும், தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. பாகுபலி 2 படம் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் சிக்கலைச் சந்தித்து வருகிறது. இந்தப் படத்தின் விநியோக முறையில் வழக்கத்துக்கு மாறான நடைமுறை  பின்பற்றப்பட்டுள்ளது. 
 
பாகுபலி 2 வியாபாரம் லாபத்தில் முடிந்தாலும், பைரவா, போகன் போன்ற படங்களில் ஏற்பட்ட நஷ்டம், பாகுபலியை கடுமையாக பாதித்துவிட்டது. அந்தப் படங்களில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, பாகுபலி வியாபாரத்தில் ஈடுகட்ட முயன்றதால் ரூ22 கோடி பற்றாக்குறையில் இந்தப் படம் வெளியாக முடியாமல் தடுமாறியது.
 
இதனால் இன்று அதிகாலை மற்றும் காலைக் காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். இதனால் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்