கர்மா இஸ் பூமராங்.. கொலைக்கு மேல் கொலை? - ஃ (அக்கு) பட விமர்சனம்.

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:38 IST)
அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வி.ஸ்டாலின் இயக்கத்தில் பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஃ(அக்கு).


 
கர்மா ஒரு போதும் மன்னிக்காது என்ற கருவை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.படத்தின் தொடக்கத்தில் கதாநாயகன் பிரஜினின் காதலி காயத்ரி ரெமா கொலை செய்யப்படுகிறார்.

கொலைக்கான காரணம் என்ன என விசாரிப்பதற்குள் இன்னொரு கொலை, மீண்டும் இன்னொரு கொலை என மூன்று கொலை நடக்கிறது. இந்நிலையில் கொலைப்பழி மொத்தமும் பிரஜினின் மீது விழுகிறது. 'நடக்கும் கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்பதை பிரஜின் எடுத்துச் சொன்னாலும் போலீஸ் தரப்பில் நம்ப மறுப்பதால், ஓடி ஒளிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.

பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை. திரைப்பட எடிட்டராக வரும் பிரஜன் அருமையான நடிப்பை வெளிப்படத்தி உள்ளார்.படத்தின் இயக்குனர் ஸ்டாலின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையோட்டத்துக்கு தேவையான பின்னணி இசையை தந்திருக்கிறார் சதீஷ் செல்வம். மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்