5 மொழிகளில் வெளியாகிறது "hi நான்னா" திரைப்படம்!

திங்கள், 16 அக்டோபர் 2023 (08:57 IST)
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படம் 'hi நான்னா'  இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 



தந்தை-மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த டீசர், பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் கதையை திரையில் காட்டுகிறது. கியாரா உண்மையிலேயே நானியின் மகளா, நானியும் மிருணாளும் இதற்கு முன் சந்தித்துள்ளார்களா, வேறொருவர் உடன் தனக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மிருணாள் ஏன் நானியிடம் தன் காதலை சொல்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

பல்வேறு உணர்வுகள் நிறைந்த சவாலான கதையை தனது முதல் படத்திலேயே இயக்குநர் ஷௌர்யுவ் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்பது டீசரில்  தெரிகிறது. நானி மற்றும் கியாரா கண்ணாவின் தந்தை-மகள் பந்தம் ஆகட்டும், நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் ஆகட்டும், அனைத்தையும் மிகவும் சிறப்பாக இயக்குநர் சமன் செய்துள்ளார்.

தனது சிறப்பான நடிப்பின் மூலம் நானி நம்மை கவர்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்வுப்பூர்வமான ஒரு பாத்திரத்தில் அவரை பார்க்க முடிகிறது. சில காட்சிகளில் இளைஞர் ஆகவும் சில காட்சிகளில் நடுத்தர வயது ஆணாகவும் அவர் ஜொலிக்கிறார். தனது இருப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் காட்சிகளை மிளிர வைக்கிறார் மிருணாள் தாக்கூர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்