"ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவேண்டும்" காதலிக்கிறாரா அக்‌‌ஷரா ஹாசன்?

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (18:55 IST)
கமல் ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் கடந்த 2015ம் ஆண்டில், பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 


 
சமீபத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில்  விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து பாசிடிவாக விமர்சனங்களை பெற்று பரவலாக பேசப்பட்டார். இதையடுத்து தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் ‘பிங்கர்டிப்’ என்ற வெப் சீரிசில் முன்னணி கதாபாத்திரத்தில் அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.
 
மொபைல் ஆப்களை மையமாக கொண்டு சமூகவலைத்தளத்தில் அடுத்தவர்களின் பிரைவேட் விஷயங்ககளை திருடும் ஹேக்கர்ஸ்களை மையமாக கொண்டு திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த தொடரை ஷிவாகர் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். 
 
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 21-ந் தேதியிலிருந்து 25-க்குள் ஒளிபரப்பாகஉள்ள இத்தொடரின் பிரெஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்ஷரா ஹாசனிடம்  காதலில் எது முக்கியம்? என்று கேட்டதற்கு "காதலில் நேர்மை மிக முக்கியம்" என பதிலளித்தார். மேலும் சமூகவலைத்தளங்கள்  மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றிலிருந்து சற்று விலகி நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் சகஜமாக பழகவேண்டும் என கூறியுள்ளார். 
 
இதையறிந்த ரசிகர்கள் பலர் அக்ஷரா கொடுத்துள்ள டிப்ஸை பார்த்தால் அவர் காதலில் நல்ல அனுபவம் மிக்கவராக இருப்பார் போலிருக்கே என கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்