அஜித் நடிக்கும் ரீமேக் படம் ’கன்பார்ம்’: ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (16:02 IST)
பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவது உறுதியாக்கப்பட்டுள்ளது. கோவா திரைப்பட விழாவில் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் தற்போது விஸ்வாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில்  படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித் நடிப்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.
 
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரன் ஒன்று ஆகிய ஹிட் படங்களை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்குவதாகவும் மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகையின் கணவரான போனிக்கபூர் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியுள்ளது.
 
பிங்க் என்ற  ஹிந்தி திரைப்படத்தில் அமிதாப்பச்சன் டாப்சி ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்