அஜித்தை தமிழக அரசியலில் இறக்குவேன். பிரபல இயக்குனர் பேட்டி

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (21:00 IST)
தல அஜித் கடந்த சில வருடங்களாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல், தான் உண்டு தன்னுடைய படம் உண்டு என்று அமைதியாக இருக்கின்றார். குறிப்பாக அரசியல் பக்கம் தலைவைத்து கூட படுப்பது இல்லை.





முன்னாள் முதல்வரின் மறைவிற்கு பின்னர் அஜித் அதிமுகவில் இணைவார் என்று வதந்தி கிளம்பியது. ஆனால் நாளடைவில் அது மறைந்தது. இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் அஜித்தை தமிழக அரசியலில் இறக்கி காட்டுவேன் என்று கூறியுள்ளார்

Lake of Fire' என்ற ஆங்கில படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராஜ்திருசெல்வன் அடுத்ததாக தமிழக அரசியல் பின்னணியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதையை அஜித்திடம் கூறியுள்ளதாகவும், இந்த படத்தின் கதையை அஜித்தை மனதில் வைத்துதான் தான் எழுதியதாகவும், அஜித் இந்த படத்தில் நடிப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தாலும், இரண்டு கட்சிக்கும் பின்னால் ஒரு சக்தி மிகுந்தவர் இருக்கின்றார். அவர் யார் என்பது தமிழக மக்களுக்கு இதுவரை தெரியாது. இந்த படத்தில் அதை வெளிப்படுத்த போகிறேன். இதனால் எனக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்தாலும் வரலாம், ஆனால் அதற்கெல்லாம் நான் அசரப்போவதில்லை என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்/.

அஜித் இவரது இயக்கத்தில் நடிப்பது உண்மைதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்