ஜி.வி.பிரகாஷை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள்!!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (17:42 IST)
விஜய் ரசிகர்கள் புருஸ் லீ படத்திற்காக களத்தில் இறங்கி வேலை செய்து ஜி.வி.பிரகாஷை உற்சாகப்படுத்தி உள்ளனர்.


 
 
இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். விஜய் ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அல்லது நடிகர்கள் கூட விஜய் ரசிகராக இருந்தால் தங்கள் ஆதரவை அவர்களுக்கும் கொடுப்பார்கள்.
 
அப்படித்தான் இன்று வெளியாக இருக்கும் புருஸ்லீ படத்திற்கு விஜய் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தந்துள்ளனர், இதற்காக பல இடங்களில் போஸ்டர் அடித்துள்ளனர்.
 
ஜி.வி.பிரகாஷ் பல பேட்டிகளில் தன்னை விஜய் ரசிகர் என்று சொல்லியது மட்டுமில்லாமல், அவருக்கு ஆதரவாக பல முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்