அஜித்தின் ‘’வலிமை’’ பட அடுத்த அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (00:07 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார்.
 
இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
 
சமீபத்தில் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி சாதனை படைத்தது.
 
இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்தார்.
 
இதையடுத்து, வலிமை படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகிறது. அதன்படி,  நாளை மறுநாள், வலிமை படத்தில் அஜித் - வில்லன் இடையேயான சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற உள்ளதாகவும் , வரும் 23 ஆம் தேதி வரை அந்நாட்டில் ஷூட்டிங் நடைபெர்டும் எனத் தகவல் வெளியாகிறது.
 
 ஏற்கனவே  வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்