தமிழ் சினிமாவில் மங்காத்தா, தாம்தூம் , காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். இவரது தந்தை ராம்ராய். இவர் இன்று காலமானார்.
இதுகுறித்து லட்சுமி ராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அதில், என் அப்பாவின் இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது, இருப்பினும் அவர் இழப்புடன் நான் வாழக் கற்றுக் கொள்கிறேன்.என் இதயம் மிகவும் வலிக்கிறது என் அப்பா இல்லாததால்…உங்களை என்னால் காப்பாற்ற முடியாது…உங்களை மிகவும் விரும்புகிறேன்..தினமும் உங்களை மிஸ் செய்கிறேன்…நாங்கள் எல்லோரும் உங்களை விரும்புகிறோம்…என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அவரது தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.