செம்ம ரெஸ்பான்ஸா இருக்கே… வெளியான 16 மணிநேரத்தில் 2.5 கோடி பார்வைகள்!

vinoth

சனி, 1 மார்ச் 2025 (12:59 IST)
சமீபத்தில் ரிலீஸன அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அது மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கே அந்த படம் பிடிக்கவில்லை. அதனால் அவரின் அடுத்த ரிலீஸான ‘குட் பேட் அக்லி’ மேல் ரசிகர்கள் அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.

வேகமாக ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்களை அடக்கி  படத்தொகுப்பு செய்யபப்ட்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான 16 மணிநேரத்தில் சுமார் 2.5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. வழக்கமாக அஜித் பட வீடியோக்களுக்கு வரும் பார்வைகளை விட இது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்