வெற்றிமாறன் என் அம்மா மாதிரி எச்சரிப்பார்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

vinoth

சனி, 1 மார்ச் 2025 (08:43 IST)
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி வருகிறது.  படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் உருவாகி வருவதாக சொலப்படுகிறது. இந்த படத்தை ஜி வி பிரகாஷின் ‘பேரலல் யூனிவர்ஸ் ‘ நிறுவனத்தோடு இணைந்து ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து கிராபிக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. படம் மார்ச் 7 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அப்போது வெற்றிமாறன் பற்றி பேசிய ஜி வி, “வெற்றிமாறன் என்னுடைய அம்மா மாதிரி. நான் நடிப்பு, தயாரிப்பு என எதை பற்றி சொன்னாலும், அதில் இருக்கும் ஆபத்துகளை சொல்லி என்னை எச்சரிப்பார்.  முழுமையாகத் துணை நின்று வழிநடத்துவார்.  என் அம்மாவும் அப்படிதான் என்னிடம் நடந்துகொள்வார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்