அஜித்தின் குட் பேட் அக்லி... மாஸான இண்ட்ரோ பாடல் ஷூட்டிங் -லேட்டஸ்ட் அப்டேட்

vinoth
திங்கள், 3 ஜூன் 2024 (15:28 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது.

அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட முன்பாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது ஒரு மாஸான அஜித் அறிமுகப் பாடலை எடுக்க உள்ளார்களாம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் துள்ளலாக உருவாகி வரும் இந்த பாடலில் 150 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் அஜித்தோடு இணைந்து நடனமாட உள்ளார்களாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்