பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகள் மற்றும் படங்களின் வெற்றிநிகழ்ச்சிகளில் வித்தியாசமான உணவுகளை ருசிகரமாக சமைத்துக் கொடுத்து தனக்கென ஒரு ப்ராண்ட்டை உருவாக்கிக் கொண்டார். அதன் பின்னர் அவர் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸானது.