நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருந்த புதிய திரைப்படம் கைவிடப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான சிம்புவின் கால்ஷீட் வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்காக சிம்பு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என மூன்று மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் மாதம் தொடங்கிவிட்ட நிலையிலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதனால், ஆகஸ்ட் மாதத்திற்கான சிம்புவின் கால்ஷீட் வீணாகிவிட்டதாகவும், இப்போதைக்கு இந்தப் படம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என்றும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் படத்திற்கான கால்ஷீட் வீணான நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும், சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருந்த படம் கைவிடப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.