கேப்டன் இருந்திருந்தால் ரஜினிகாந்துக்குப் பாராட்டு விழா நடத்தியிருப்பார் – பிரேமலதா வேண்டுகோள்!

vinoth

புதன், 13 ஆகஸ்ட் 2025 (08:28 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 45 ஆண்டுகளாக ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறார். இடையில் அவர் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் அவருக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்து அடையாளம் பெற்று, வில்லனாகி, ஹீரோவாகி, சூப்பர் ஸ்டானார்.

இந்நிலையில் அவரின் ஐம்பதாவது ஆண்டில் அவரின் கூலி திரைப்படம் அதே சுதந்திர நாள் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாகிறது. இந்நிலையியில் ரஜினிகாந்தின் ஐம்பதாவது ஆண்டு குறித்துப் பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ள கருத்துக் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால் 50 ஆண்டுகளை திரையுலகில் நிறைவு செய்திருக்கும் ரஜினிகாந்துக்குப் பாராட்டு விழா நடத்தியிருப்பார். இப்போது சினிமாவில் இருக்கும் அனைத்து சங்கங்களும் இணைந்து ரஜினி சாருக்குப் பாராட்டு விழா நடத்தவேண்டும். ” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்