சினிமாவில் 20 ஆம் ஆண்டு பயணத்தில் அஜித் பட நடிகை

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (16:38 IST)
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்  சுசி கணேசன் இயக்கத்தில் உருவான பைவ் ஸ்டார் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். பின்னர் சேரனும் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த 3 கதாப்பாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்ற படம் வரலாறு. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் கனிகா.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டிவாக இருக்கும் கனிகா, சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இவர், சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்த மலையாள திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதேபோல், நடிகர் விக்ரமும் இணைந்து கோப்ரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சினிமாவில் தன் 20 ஆண்டுப் பயணத்தை இன்று தொடங்கவுள்ளார் கனிகா. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்