சிரஞ்சீவியின் காட்ஃபாதர்: விவேக் ஓபராய் வேடத்தில் பிரபல நடிகர்!
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:02 IST)
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் காட்பாதர் என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
மோகன்லால் மலையாளத்தில் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
இந்த நிலையில் லூசிபர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்த கேரக்டரில் நடிக்கும் நடிகர் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
இந்த கேரக்டரில் பிஜூமேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த கேரக்டர் படத்தில் முக்கியமான கேரக்டர் என்பதால் பிஜூமேனன் சரியான தேர்வு என்று பலரது பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது