ரேஸில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் ஷாலினிக்கு நன்றி சொன்ன அஜித்!

vinoth
திங்கள், 13 ஜனவரி 2025 (08:23 IST)
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அஜித்தின் சக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

துபாய் 24 ஹெச் கார் ரேஸில் அஜித்தின் அணி கலந்து கொண்ட நிலையில் கடைசி நேரத்தில் அஜித் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அவரது அணியின் மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 24 மணிநேரத்தில் அதிக தூரத்தைக் கடந்த அணிகளின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் பரிசு பெற்ற பின்னர் பேசிய அஜித் “என்னை ரேஸிங் செய்ய அனுமதித்ததற்கு என் மனைவி ஷாலினிக்கு நன்றி” எனப் பேசியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்