நடிகர் அஜித்குமார் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் அவரை வாழ்த்தி பிரபலங்கள் போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் நிறுவனம் துபாயில் நடந்த சர்வதேச 24H கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் அஜித்குமாரின் இந்த வெற்றியை அவர் இந்திய கொடியை கையில் ஏந்தி கொண்டாடிய நிலையில், அவரது ரசிகர்களும் இந்த வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த தமிழ் சினிமா வட்டாரமே அஜித்தின் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அஜித்குமாரை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “#AjithKumarRacing அணியின் முதல் பந்தயத்திலேயே அசாதாரண சாதனை! தனது பன்முகத்தன்மை கொண்ட ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய மோட்டார் விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க மற்றும் முக்கியமான தருணம்” என்று தெரிவித்துள்ளார்
தொடர்ந்து இயக்குனர் நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சிபிராஜ் என பல திரை பிரபலங்களும் அஜித் தேசத்தின் பெருமை என்ற போஸ்டரை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports. pic.twitter.com/DsuCJk4FFB
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2025