பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ‘காதலிக்க நேரமில்லை’… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

vinoth

புதன், 15 ஜனவரி 2025 (08:54 IST)
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்க ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் இணைந்த படங்களில் இந்த படமும் ஒன்று. ஜனவரி 14 ஆம் தேதி நேற்று இந்த படம் ரிலீஸான நிலையில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்