’அஜித் 61’ படப்பிடிப்பு தொடங்கியது: 3 மாதத்தில் படத்தை முடிக்க திட்டம்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:10 IST)
அஜித்தின் 61வது படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அஜித்தின் 60வது திரைப்படமான வலிமை சமீபத்தில் ரிலீசான நிலையில் அவரது 61வது படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது
 
இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை அடிக்கும் படம் என்றும் பேராசிரியராக நடிக்கும் அஜித் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடுவது ஏன் என்பதும் அதை காவல்துறையினரால் தடுக்க முடிந்ததா என்பதுதான் இந்த படத்தின் விறுவிறுப்பான கதை என்று கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த படத்தை மூன்று மாதங்களில் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்