அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ், தமன், நிஹாரிகா, ரக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சாய் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்த படத்தில் 8 பாடல்கள் இடம்பெறும் வகையில் கதையை உருவாக்கியுள்ளார்களாம். இதற்கான 8 பாடல்களையும் தமன் உருவாக்கிக் கொடுத்து விட்டாராம். சமீபகாலமாக படங்களில் பாடல்களின் எண்ணிக்கைக் குறைந்து வரும் நிலையில் பழையப் படங்கள் போல அதிகப் பாடல்கள் கொண்டப் படமாக இதயம் முரளி உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.