நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்! டைட்டில் அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 மே 2019 (20:03 IST)
சீயான் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் அவர் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' மற்றும் மகாவீர் கர்ணா' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் தற்போது விக்ரம் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரமின் 58வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' மற்றும் அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 'விக்ரம் 58' என்ற தலைப்பில் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்