தம் அடிக்க டிரெய்னிங்...அடக்கமான நடிகையின் அட்டகாசமான வீடியோ!

திங்கள், 20 மே 2019 (08:42 IST)
நடிகை மஹிமா நம்பியார் தனது டிரெய்னிங் வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
நடிகை மஹிமா, சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்து பிரலமானார். தற்போது அசுரகுரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். 
 
இந்நிலையில், மஹிமா இந்த படத்திற்காக எடுத்துள்ள டிரெய்ன்ங்கை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் புகை பிடிப்பது போல சில காட்சிகளும் உள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மாஸ் ஹீரோக்கள், புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் நடிகைகள் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கின்றனர். 
 
சமீபத்தில் வெளியாகும் படங்களில் நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகள் திரையில் வெளியாவது சர்ச்சையையே ஏற்படுத்துகிறது. 

My excitement knew no bounds when I got the character sketch for #Asuraguru. The transformation from the girl next door to this role was not easy. Here is a training video I wanted to share with you☺️ @iamVikramPrabhu @A_Raajdheep @JsbSathish @idiamondbabu pic.twitter.com/JjMz3APXsC

— Mahima Nambiar (@Mahima_Nambiar) May 18, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்