இப்படியே பண்ணிட்டு இருந்த அடிதடி ஆகும் - ஐஸ்வர்யாவை எச்சரிக்கும் மகத்

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (14:51 IST)
பிக்பாஸ் புரமோவில் இப்படியே பண்ணிட்டு  இருந்த அடிதடி ஆகும் - ஐஸ்வர்யாவை எச்சரிக்கும் மகத் இருந்தால் அடிதடி ஆகும் என ஐஸ்வர்யாவிடம் மகத் எச்சரிக்கிறார்.
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. பிக்பாஸின் முழு ஆதரவு இருப்பதாலும், தன்னை பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார் என்ற தைரியத்திலும் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக நடந்து கொள்கிறார்.
 
இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் 'பாலாஜியை வெச்சு செய்வேன்' என்று கூறிய ஐஸ்வர்யா, குப்பை தொட்டியில் உள்ள குப்பையை பாலாஜி மீது கொட்டுகிறார். பாலாஜி கண்ணீருடன் அமைதியாக உள்ளார்.
இந்நிலையில் சற்று முன்பு 2வது புரமோ வெளியானது அதில், படுத்திருக்கும் பாலாஜியிடம் எழுந்திருக்குமாறு சென்றாயன் கூறுகிறார். இல்லையென்றால் தண்ணீர் ஊற்றிவிடுவார்கள் என கூறுகிறார். இதற்கு பாலாஜி வேண்டுமென்றால் ஊற்றட்டும் என பொறுமையாக கூறுகிறார். 
மறுபக்கம் டேனியலிடம் பேசும் ஐஸ்வர்யா, பாலாஜி அடமென்ட் என்றால் நான் டபுள் அடமென்ட் என கூறுகிறார். இப்படியே செய்தால் மூஞ்சியில் ஸ்பிரே அடிப்பேன் என ஆவேசமாக பேசினார். இதனைக்கேட்ட மகத், இப்படி செய்தால் கண்டிப்பாக 100 சதவீதம் அடிதடி ஆகும் என கூறினார்.
 
இதனை சற்றும் கண்டுகொள்ளாத ஐஸ்வர்யா இரண்டு கரண்டிகளுடன் பாலாஜியிடம் சென்று அவரை தொந்தரவு செய்யும் விதத்தில் கரண்டியை வேகமாக தட்டுகிறார்.
பாலாஜி என்னதான் தவறு செய்திருந்தாலும், அவரது வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் ஐஸ்வர்யா செய்த இந்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாதாரணமாகவே ஐஸ்வர்யாவின் ஆட்டம் அதிகம் இருக்கும் நிலையில் அவருக்கு தலைவி பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது ஆட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்