ஒரே ஒரு " சூப்பர் ஸ்டார்" தான் அது... ஐஸ்வர்யா ராஜேஷ் பளார் பதில்!

Webdunia
சனி, 13 மே 2023 (17:53 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து நேற்று ரிலீஸ் ஆன  திரைப்படம் பர்ஹானா. 
 
இந்த படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. இதனால் படத்தை வெளியிட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கூறினார்கள். 
 
இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், "ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான். அது ரஜினிகாந்த் தான். அதன் பின்னர் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை நயன்தாராவுக்கு கொடுத்திருக்கிறார்கள். எனவே நான் சூப்பர்ஸ்டார் இல்லை" என தெளிவாக கூறிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்