தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பதும் உலகம் முழுவதும் இந்த படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்படும் அபாயம் மற்றும் வினியோகஸ்தர் சங்கத்தின் திடீர் வேலைநிறுத்தம் ஆகியவை காரணமாக விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
மார்ச் 27-ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிட போவதில்லை என விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டி ராஜேந்தரின் அறிவிப்பு, விஜய்யின் ’மாஸ்டர்’ படக்குழுவினருக்கு ஒரு பேரதிர்ச்சி ஆகும்
இந்த நிலையில் இந்த பாதிப்பு மாஸ்டருக்கு மட்டுமன்றி அதனை அடுத்து வெளியாக இருக்கும் சூர்யாவின் சூரரைப்போற்று உள்பட பல பெரிய படங்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகளுடன் ’மாஸ்டர்’ படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ’மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தத்தை தள்ளி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது