முன்னணி நடிகர்கள் மேல் ஆதித்ய வர்மா தயாரிப்பாளர் கோபம்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (17:43 IST)
ஆதித்ய வர்மா தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா முன்னணி கதாநாயகர்களை சாடும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கிட்டத்தட்ட விலக்கப்பட்டு புதிய இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் இன்னமும் சினிமா திரையரங்குகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆதித்யா வர்மாவின் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா ‘தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி கதாநாயகர்கள் யாருமே, திரையரங்குகளை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதில்லை’ எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்