கொரோனா முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2.5 உதவி - நடிகர் சூர்யா

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (15:32 IST)
நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. 
 

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தினார். 

மேலும், சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும் என சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது ரூ.5 கோடியை வழங்கியுள்ளார். 

அதாவது, சூரரை போற்று வெளியீட்டுத்  தொகையில் இருந்து சூர்யா சார்பாக சிவக்குமார் ரூ.5 கோடி வழங்கினார். இந்த தொகையில் முதற்கட்டமாக பெப்ஸிக்கு ரூ.1 கோடியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாகச் செயல்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும், உறுப்பினர்கள் அல்லாத விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள் மற்றும் சூர்யா நற்பணி இயக்கத்தினருக்கு ரூ.1 கோடி  வழங்க முடிவு செய்துள்ளதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்