பிறந்த நாளில் திருப்பதியில் தரிசனம் செய்த த்ரிஷா: செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்!

Webdunia
புதன், 4 மே 2022 (17:51 IST)
பிறந்த நாளில் திருப்பதியில் தரிசனம் செய்த த்ரிஷா: செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்!
நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்த நாளில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.  ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு அவர் வெளியே வந்த போது பக்தர்கள் அவரிடம் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த தோடு செல்பியும் எடுத்துக் கொண்டனர்
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  நடிகை த்ரிஷா தற்போது 'தி ரோட்’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்