எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்த ராங்கி… ரிலீஸ் தாமதம் ஏன்?
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (10:13 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் அவற்றில் நான்கு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில் ரிலீஸ் தாமதத்துக்கான காரணம் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ராங்கி படத்துக்கு ஏ ஆர் முருகதாஸ் கதை எழுத, அவரின் உதவியாளரான சரவணன் இயக்கியுள்ளார்.
தர்பார் படம் சம்மந்தமாக லைகா நிறுவனத்துக்கும் ஏ ஆர் முருகதாஸுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இந்த படம் ரிலீஸாகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.