இனிமேலாவது வாய்ப்பு கிடைக்குமா? லேட்டஸ்ட் போட்டோ வெளியிட்டு கவனம் ஈர்க்கும் ஸ்ரீதிவ்யா!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (13:48 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. 
 
அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை. இதனால் அடையாளம் இல்லாமல் போனார். காரணம் இமான் அண்ணாச்சி புதிய வீடு கட்டி கிரகப்ரவேசம் செய்தார். அந்த பார்ட்டிக்கு சென்ற ஸ்ரீ திவ்யா அங்கு நடிகர் நடிகைகளுக்கு மது விருந்து கொடுப்பட்டதில் ஸ்ரீ திவ்யா அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் கூத்தடியுள்ளார். பின்னர் போதை தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
இந்த சமாச்சாரம் கோலிவுட் முழுக்க பரபரப்பாக பேசப்பட அவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கிராமத்திற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இனிமேலாவது வாய்ப்பு கிடைக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்ஸ். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்