கஷ்டமான நேரத்துல இதை பண்ணினோம் - கணவருடன் நடிகை ரம்பா வெளியிட்ட வீடியோ!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (08:39 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைக்ளுடன் வீட்டிற்குள்ளே திருமண நாளை கொண்டாடியுள்ளார். அது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் கூறியுள்ளதாவது, உலகெங்கிலும் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றின் சூழ்நிலை காரணமாக, எங்களைச் சுற்றியுள்ள நண்பர்களும் உறவினர்களும் இல்லாமல், என் கணவர், என் குழந்தைகள் லான்யா, சாஷா மற்றும் ஷிவின் ஆகியோருடன் இந்த நாளை சிறப்பாக கொண்டாடினோம்.


மேலும்  என் மகள்கள் லான்யா மற்றும் சாஷா  இருவரும் இணைந்து ஒரு அழகான சர்ப்ரைஸ் கார்ட் கொடுத்து எங்களது திருமண நாளை மகிழ்ச்சி அளித்தனர். பணம், ஸ்பெஷலான பரிசுகள் எதுவும் இல்லாம் அழகிய காதலுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம். வெளியில் இருந்து கேக் கூட வாங்காமல் நாங்களாகவே கேக் செய்து வெட்டினோம். இது வெளியில் வாங்குவதை விட அருமையாக இருந்தது. மேலும், இந்த கேக்கின் ஒவ்வொரு துண்டிலும் எங்களது 10 வருட காதலை நினைவூட்டுகிறது.  என மிகுந்த மகிழ்ச்சியுடன் நடிகை ரம்பா தனது 10 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Due to this current situation throughout the world, without no friends and relatives around us and just me, my husband, my kids(laanya, sasha & shivin), had a celebration - just by staying in the home. This is one of the best function we ever had because it had a very personal touch & very intimate. We made our own arrangements within the home by helping each other. We baked the cake together which is very special than ordering outside. Every single part of the cake has our 10 years of love story. Overwhelmed with happiness, as my daughters- Laanya and Sasha made a surprise special card for us. During hard times, still, we all can be happy with love & togetherness, which does not require any money nor any special gifts. Everyone, #staystrong and spend your time with your family and #staysafe! #tenyearsoftogetherness #quarantine #familytime #loveintheair

A post shared by RambhaIndrakumar

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்