அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ரேஷ்மா ரத்தோர். இவர் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் கவர்ச்சியில் கலக்கி வந்த நடிகை ரேஷ்மா ரத்தோர் தற்போது தெலுங்கானா கம்மாம் மாவட்டத்தின் வைரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
பாஜகவில் இணைந்திருக்கும் ரேஷ்மாவுக்கு தெலுங்கானாவில் உள்ள வைரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக பச்சைக்கொடி காட்டியுள்ளது.
அரசியலில் குதித்துள்ளதால் அடக்கமாக சேலை உடுத்தி கையை அசைப்பது போலவும், கரம் கூப்பி வணக்கம் சொல்வது போலவும் படங்கள் எடுத்துள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா அரசியலில் நடிகைகள் விஜயசாந்தி, ரோஜா, வாணி விஸ்வநாத் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் சமீபத்தில் கவர்ச்சி நடிகை ரேஷ்மாவும் அரசியலில் குதித்தார்.