பிக்பாஸ் போட்டியாளர் ரசிகர்கள் மீது நடிகை புகார்!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:07 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பரவலான  ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரின் ரசிகர் மீது பிரபல நடிகை மோனல் கஜ்ஜார் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மோனல் கஜ்ஜார். இவர் சமீபத்தில் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இந்த சீசனின் அபிஜித் வெற்றியாளராக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோனல் கஜ்ஜர், அபிஜித் ரசிகர்கள் மீது போலீஸிர் புகார் அளித்துள்ளார்.

அதில், அபிஜித்தின் ரசிககர்கள் தன்னை அவதூறான வார்த்தைகளினால் விமர்சிப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்