தியேட்டர் உரிமையாளர்களுக்கு நடிகர் விக்ரம்மின் கோரிக்கை!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (14:50 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தின் முன்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக நடந்துள்ளது. பலரும் குடும்பத்துடன் படத்தைப் பார்க்க ஆர்வமாக முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் “படத்தைப் பார்க்க நிறைய முதியவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குக்கு வருவார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை திரையரங்க உரிமையாளர்கள் செய்து தரவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்