ஜி பி முத்துவ கலாய்த்த சதீஷ்… வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:51 IST)
டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சையில் தேறி வந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடக்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளப் போவதாகவும் அது சம்மந்தமான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. ஆனால் அது உண்மையா என்பது தெரியாத நிலையில் இப்போது ஜி பி முத்துவே அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து ‘நான் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என நீங்களே சொல்லுங்க நண்பர்களே ‘ எனத் தனது பாலோயர்ஸ்களைக் கேட்டுள்ளார்.
இந்நிலையில் இது சம்மந்தமான புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் சதீஷ் ‘இவருக்கு டாஸ்க் லெட்டர படிக்க விட்றாதீங்க. என்னடா டாஸ்க் கொடுக்குறீங்க செத்த பயலுவலா, நாரப்பயலுவளா’ எனக் கூறி கலாய்க்கும் விதமாக பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் சதீஷை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்