ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனாக நடிக்க வேண்டிய பார்த்திபன்… ஈகோவால் மிஸ் ஆன வாய்ப்பு!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:23 IST)
ஆடுகளம் திரைப்படத்தில் பெரிதும் கவனம் பெற்ற பாத்திரங்களில் ஒன்று பேட்டைக்காரன் பாத்திரம்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியையும் 6 தேசிய விருதுகளையும் பெற்ற திரைப்படம் ஆடுகளம். இந்த படத்துக்காக தனுஷ், வெற்றிமாறன், படத்தொகுப்பாளர் கிஷோர் மற்றும் நடிகர் ஜெயபாலன் ஆகியோர் தேசிய விருதுகளை வென்றனர்.

ஜெயபாலன் நடித்த பேட்டைக்காரன் பாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றிமாறன், நடிகர் பார்த்திபனைதான் கேட்டாராம். ஆனால் தன்னுடைய புதுமையான கதை ஒன்றில் நடிக்க தனுஷ் மறுத்ததால், அதனால் இருந்த கோபம் காரணமாக பார்த்திபன் அந்த படத்தில் நடிக்க மறுத்தாராம். இதை சமீபத்தில் அவரே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்