நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (11:28 IST)
பிரபல நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தி, பேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடதக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பேஸ்புக் பக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சமீபகாலமாகவே பிரபலஙக்ளின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தற்போது ராஜுமுருகன் இயக்கி வரும் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்