தமிழ் சினிமாவில் இளம் நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.