பொன்னி நதி பாக்கணுமே… முழு வீடியோ பாடல் ரிலீஸ் எப்போது? – வெளியான தகவல்!

திங்கள், 14 நவம்பர் 2022 (10:02 IST)
கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முதல்பாகத்தை கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டனர்.. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்துக்கான முதல் ப்ரமோஷனாக பொன்னி நதி பாக்கணுமே பாடல் வெளியிடப்பட்டது. அந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவர்ந்தது. அந்தவகையில் படம் ரிலீஸாகி இண்டஸ்ட்ரி ஹிட் ஆகிவிட்ட நிலையில் தற்போது அந்த பாடலின் முழு வீடியோ வடிவம் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்