அஜித்தை நக்கல் அடித்துக் கதை சொன்ன பிரபல நடிகர்… ரசிகர்கள் அதிருப்தி!

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:02 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. தியேட்டரில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த திரைப்படம் ஓடிடியில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் கல்கி ராஜா. போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கும் ‘போலீஸ்’ என்ற பெயர் கொண்ட திருடனாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதே போல அவர் மண்டேலா மற்றும் குரங்கு பொம்மை ஆகிய படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார்.

இந்நிலையில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அஜித்துக்குக் கதை சொன்ன அனுபவத்தை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அஜித்துக்குக் கதை சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது நான் “ஒரு அம்மா பிரசவ வலியில் துடிக்கிறார். அப்போது மருத்துவர் ஆப்பரேஷன் பண்ணிதான் எடுக்கணும்” என சொல்ல, உறவினர்கள் “ஏன்” எனக் கேட்கின்றனர். அதற்கு டாக்டர் “கொழந்தைக்கு தலை கொஞ்சம் பெருசாக இருக்கிறது. அதனால்தான் ஆப்பரேஷன் பண்ணவேண்டும்” எனக் கூறுகிறார். அப்போது ஃப்ரீஸ் பண்ணி ‘தல அஜித்’ என்று டைட்டில் போடுகிறோம் என சொன்னேன். அதைக் கேட்டு ஒரு பார்வை முறைத்துவிட்டு சென்றுவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்