நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அந்த படம் ரிலீஸாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை விக்னேஷ் ராஜா அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அர்ஜுன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதமே தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஜூன் மாதம்தான் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய செட் ஒன்றை அமைக்கும் பணிகள் தாமதம் ஆனதன் காரணமாக படப்பிடிப்புத் தொடங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.