தொடங்கியது விஜய் சேதுபதி & பாண்டிராஜ் இணையும் படத்தின் ஷூட்டிங்!

vinoth

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:43 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த படத்தைத் தொடங்கியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி தற்போது நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நித்யா மேனன் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்