பாடலான #cryingout என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்பாடல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாவுள்ளதாக ஜிவி பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர், நடிகர் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்தும், மூன்று படங்களில் இசையமைத்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் முதல் முறையாக ஆங்கில ஆல்பம் ஒன்றை ஜிவி பிரகாஷ் தயாரித்து வெளியிட்டார். இதில், ஹாலிவுட் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த ஆல்பத்தின் டைட்டில் கோல்ட் நைட்ஸ்என்பது குறிப்பிடத்தக்கது
ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஜூலியா கர்தா ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் #HighandDry என்ற பாடல் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி உலக அளவில் ரிலீசாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஜிவி.பிரகாஷின் அடுத்த ஆல்பம் பாடலான #cryingout என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்பாடல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாவுள்ளதாக ஜிவி பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த நிலையில் இன்று நடிகர் தனுஷ் இப்பாடலை வெள்யிட்டுள்ளார். இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.