கமல்ஹாசனை கலாய்த்தவர் இன்று பிக்பாஸ் போட்டியாளர்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (07:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 4 நாட்களாக நடத்திவந்த கமல்ஹாசன் தற்போது ஐந்தாவது சீசனையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த ஒருவரே இந்த சீசனின் போட்டியாளராக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவர் அபிஷேக் ராஜா. இவர் யூடியூபில் பிரபலமானவர் என்பதும் பிரபலங்களை பேட்டி எடுப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அபிஷேக் ராஜா கமல்ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியை 100 நாட்கள் நடத்திவிட்டு தமிழ்நாடு சிஎம் ஆகலாம் என்று நினைக்கிறாயா என்று அவர் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல்ஹாசனைப் கலாய்த்துவிட்டு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அபிஷேக் ராஜாவை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்